
கிரிமின்
ரஷ்ய நாட்டையும் கிரிமின் தீபகற்ப பகுதியையும் இணைக்கும் பாலத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திறந்து வைத்தார்.
ரஷ்யாவையும் உக்ரைன் நாட்டின் கிரிமின் தீபகற்பத்தையும் இணைக்கும் பிரம்மாண்டமான பாலம் ஒன்று சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைக்கப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரஷ்ய நாட்டிலும் இதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த பாலம் சுமார் 12 மைல் நீளமுள்ளதாகும்.
இந்த பாலத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திறந்து வைத்தார். திறந்த பிறகு அதில் முதல் பயணியாக அவர் ஒரு டிரக்கை ஓட்டிச் சென்றார். ஆனால் பாதியிலேயே நிறுத்தி விட்டார். அதற்கு காரணம் பாலத்தில் நடந்த போராட்டம் அல்ல. ஒரு பூனையின் குறுக்கோட்டம் தான்.
அந்த பாலத்தின் கட்டுமான தொழிலாளர்கள் செல்லமாக ஒரு பூனையை வளர்த்து வந்தனர். அந்தப் பூனை பாலத்தில் ஓடி விளையாடுவது வழக்கம். அதிபர் புடின் வந்த போது பாதுகாவலர்கள் அங்கிருந்து பூனையை விரட்டி விட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பார்வையில் இருந்து தப்பிய பூனை பாலத்தின் இடையில் சென்று உலா வந்துக் கொண்டிருந்தது.
அதன் பிறகு அந்தப் பூனையை பாதுகாவலர்கள் அங்கிருந்தும் விரட்டி உள்ளனர். இது குறித்து அமெரிக்க நாளேடு ஒன்று ரஷ்ய அதிபருக்கு முன் ஒரு பூனை அந்தப் பாலத்தில் முதல் முதலாக பயணம் செய்துள்ளதாக கேலி செய்துள்ளது.
[youtube-feed feed=1]