பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றார்.  அவருக்கு மாநில கவர்வர் வஜுபால் வோலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

எடியூரப்பா கர்நாடக மாநிலத்தின் 23-வது முதலமைச்சராக இன்று பதவி ஏற்றுள்ளார். அவருக்கு கவர்னர் வஜுபாய் வாலா வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக இன்று காலை எழுந்ததும் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை மேற்கொண்ட எடியூரப்பா அதைத்தொடர்ந்து ராஜ்பவன் வந்தார், அங்கு அவருக்கு கவர்னர் முதல்வராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரசாத், பிரகாஷ் ஜவ்டேகர் கலந்துகொண்டனர்.

லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா கர்நாடகாவின் 23வது முதல்ராக பதவி ஏற்றார், ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் அவர் பதவியேற்றார்.

முன்னதாக  பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு செல்லும் முன்பு , வழியில் பெங்களூர் ராதாகிருஷ்ணன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் செல்லும் வழியில் பாஜ தொண்டர்கள் ஆட்டம் பாட்டம் மற்றும் மேளதாளத்துடன்  உற்சாக வரவேற்பு அளித்துனர்.

எடியூரப்பா பதவியேற்பு விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு கர்நாடக போலீசாருக்கு இன்று விடுப்பு மறுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.