
பெங்களூரு:
கர்நாடகாவில் நடைபெற்ற முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்குபேசம் மக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. அதுபோல தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த 12ந்தேதி நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பாஜ 104 இடங்க ளும், காங்கிரஸ் 78 இடங்களையும், ஜேடிஎஸ் 37 இடங்களையும் கைப்பற்றி உள்ளது. இதன் காரணமாக எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் சுமார் 46 தொகுதிகளில் தெலுங்கு பேசும் பக்கம் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் 50 சதவிகிதம் மக்கள் தெலுங்கு பேசுபவர்கள். அவர்களின் வாக்குகள் அனைத்தும் காங்கிரசுக்கே பதிவாகி உள்ளது தெரிய வந்துள்ளது.
தெலுங்குமக்கள் வசித்து வரும் 46 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளில், காங்கிரஸ் 32 இடங்களில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. மேலும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 9 இடங்கள் கிடைத்துள்ளது. பாரதியஜனதா கட்சிக்கு வெறும் 5 இடங்களே கிடைத்துள்ளன. இது பாஜவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே ஆந்திரம், தெலுங்கான மாநில அரசுகள் பாரதியஜனதாவுக்கு எதிரான போக்கை கடைபிடித்து வரும் நிலையில், கர்நாடகாவில் வசித்து வரும் ஆந்திர மக்களும் தங்களது எதிர்ப்பை பாரதியஜனதாவுக்கு தங்கள் வாக்குகள் மூலம் நிரூபித்து உள்ளனர்.
[youtube-feed feed=1]