
டில்லி
மத்திய அமைச்சர்களின் இலாக்காக்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளது.
இன்று மத்திய அமைச்சரவையின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே அமைச்சராக உள்ள பியூஷ் கோயலுக்கு நிதித்துறை கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.
அருண் ஜேட்லி உடல்நலம் தேறி வரும் வரையில் பியூஷ் இந்த பொறுப்பை கூடுதலாக வகிப்பார் என கூறப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை ராஜ்வர்த்தன் ராதோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக உள்ள ஸ்மிரிதி இரானி ஜவுளித்துறையை கவனிக்க உள்ளார்.
ஆலுவாலியாவுக்கு மின்னணுத்துறை வழங்க்ப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel