டில்லி
இந்தியாவின் மொத்த விலை குறியீடு கடந்த மார்ச் மாதம் 2.37% ஆக இருந்தது ஏப்ரல் மாதத்தில் 3.18% ஆக அதிகரித்துள்ளது.
மாதா மாதம் உணவு மற்றும் எரிபொருள் உட்பட பல பொருட்களின் விலைகளின் மாற்றத்தைக் கொண்டு மொத்த விலைக் குறியீடு கணக்கிடப் படுகிறது. அதை அடிப்படையாக க் கொண்டு வருடாந்திர விலை உயர்வு விகிதம் கணக்கிடப் படுகிறது. ஒவ்வொரு மாதமும் அரசின் தொழில் மற்றும் வாணிகத்துறை அமைச்சகம் இந்த கணக்கெடுப்பை வெளியிடுகிறது.
அதன் படி மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான மொத்த விலைக் குறியீடு 2.37% ஆக இருந்தது 3.18 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உணவுப் பொருட்களின் விலை 0.87% அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் உணவுப் பொருட்களின் விலை அதற்கு முந்தைய மாதத்தை விட 0.29% குறைந்து இருந்தது. எரிபொருளின் விலை சென்ற மாதம் குறைந்த அளவே அதிகரித்துள்ளது. இருப்பினும் மொத்த விலை குறியீடு உணவுப் பொருட்கள் விலையேற்றத்தினால் கணிசமாக அதிகரித்துள்ளது.