சென்னை நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் காவலர் பாலமுருகன்(28) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (28) இவர் அசோக்நகர் காவலர் பயிற்சி நிலையத்தில் காவலராக பனியாற்றி வருகிறார்.இவர் நான்கு நாட்கள் விடுமுறையில் இருந்து நேற்று பணிக்கு திரும்பியுள்ளார் அப்போது அவரை உயரதிகாரிகள் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை பாலமுருகன் தனது  வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.உடலை கைப்பற்றி நீலாங்கரை போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.