சென்னை:

மிழக வக்பு வாரிய தலைவராக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா பதவி ஏற்றுக்கொண்ட்ர்.

மண்ணடியில் உள்ள வக்பு வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அன்வர் ராஜா தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன்   வக்பு வாரிய உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.எஸ்.மஸ்தான், முகம்மது அபுபக்கர் உட்பட 11 உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

தமிழக வக்ஃபு வாரியத் தலைவர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில், தலைவர் பதவிக்கு அன்வர் ராஜா எம்.பி. போட்டியிட்டார். முன்னதாக, இந்தத் தேர்தலை நடத்தக் கூடாது என்று அதிமுகவின் அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன் கோரிக்கை விடுத்திருந்தார். பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே தேர்தல் நடைபெற்றது. அப்போது, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா எம்.பி. தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து மே 12ந்தேதி பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், நாடாறுமன்ற உறுப்பினர்கள் வெங்கடேஷ் பாபு, எஸ்.ஆர்.விஜயகுமார், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா முகம்மது ஜான், உட்படப் பலர் பங்கேற்றனர்.