சென்னை:

ஜினியின் அரசியல் மற்றும் ஆட்சி குறித்து கருத்து தெரிவித்த அமைத்த செல்லூர் ராஜுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ராஜா, அத்துடன் தனது இந்துத்துவா வன்மையையும் புகுத்தி டுவிட் செய்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  செய்தியாளர்களின்  கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்  செல்லூர் ராஜு,  நடிகர் ரஜினிகாந்த் ஒருக்காலும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றும், வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியைப் பிடிக்கலாம் என தெரிவித்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சு நகரத்தார் சமூக பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என  காரைக்குடி நகரத்தார் சங்கம் கண்டனம் தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தியது.

இந்நிலையில், பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில்,  அமைதியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இறைபணி மற்றும் கல்விப்பணி ஆற்றிவரும் நகரத்தார் சமுதாய பெண்களை ( மரியாதைக்குரிய ஆச்சிகளை) இழிவாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.  நகரத்தார் சமுதாயம் தனியாக இல்லை. ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் முக்கிய அங்கமாவார்கள்.

எச். ராஜாவின் இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சாதி மத பிரச்சினையின்றி மக்கள் அமைதியாக வாழ்ந்து வரும் நிலையில், இந்த பிரச்சினையிலும், நகரத்தார், ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் முக்கிய அங்கமாவார்கள் என்று தனது இந்துத்துவா கருத்தை திணித்திருப்பது கண்டனத்துக்கு உரியது என்று விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.