தூத்துக்குடி:

புதிதாக முளைத்த தலைவர்கள் காவிரி குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த அரசு நலத்திட்ட தொடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ‘‘பல பேர் புதிது புதிதாக கட்சி தொடங்குகிறார்கள். இவ்வளவு நாட்கள் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். காலம் போன காலத்தில் நதிகளை இணைக்க சொல்கிறார்கள்.

காவிரி பிரச்னைக்கு ஜெயலலிதா பல சட்டப் போராட்டங்களை நடத்தி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இப்போது முளைத்துள்ள தலைவர்கள் கருத்து தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது. ஆனால் தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் இயக்கம் அ.தி.மு.க. மட்டுமே’’ என்றார்.