ராஞ்சி:
கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்போது ராஞ்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், லாலு பிரசாத் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கு வரும் 12-ம் தேதி பாட்னாவில் திருமணம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வரும் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 5 நாள் பரோல் கேட்டு லாலுவின் வக்கீல் பிரபாத் குமார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.