பெங்களூரு

ர்நாடகா தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பெரும்பான்மை பெறும் என அமெரிக்க அரசின் பெயரில் போலி கணக்கெடுப்பு வெளியாகி உள்ளது.

வரும் 12ஆம் தேதி கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   அதன் முடிவுகளைக் குறித்து பல கருத்துக் கணிப்புக்கள் வெளியாகி வருகின்றன.    இந்நிலையில் சில போலிக் கணக்கெடுப்புக்களும் வெளியாகி வருகின்றன.   பிபிசி நியூஸ் வெளியிட்டதாக ஒரு கணக்கெடுப்பில் பாஜக வெற்றி பெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது.   அது ஒரு போலி என பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

அந்த பரபரப்பு அடங்கும் முன்பே மற்றொரு கணக்கெடுப்பு வெளியாகி உள்ளது.   வாட்ஸ்அப்பில் பரவி வரும் இந்த செய்தியில் டில்லியில் உள்ள அமெரிக்க தூதர் அமெரிக்க மாநில செயலருக்கு எழுதிய லெட்டர் என ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.    கையெழுத்திடப்படாத இந்த கடிதத்தில், தூதரகம் ஒரு ஏஜன்ஸியை பணிக்கு அமர்த்தி நடத்திய கணக்கெடுபின் விவரம் என குறிப்பிடப்பட்டு அதில் தேவே கௌடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் பெரும்பான்மை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் யாரும் கையெழுத்து இடவில்லை.  அதனால் இந்த லெட்டர் செல்லாது.   மேலும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விலாசத்தில் அப்படி ஒரு அலுவலகம் இயங்கவில்லை.   அந்தப் பெயரில் உள்ள அலுவலகம் நாட்டின் தலை நகரில் இல்லவே இல்லை.    மேலும் அமெரிக்க தூதரக அதிகாரி தாங்கள் இந்தியா உட்பட பல நாடுகளின் தேர்தல்களின் கவனம் செலுத்துவதாகவும் ஆனால் இதுவரை கருத்துக் கணிப்பு எதையும் நிகழ்த்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.