
சென்னை:
தமிழகத்தில் சிறை கைதிகளின் மரணம் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே சென்னை உள்பட மாவட்ட சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மரணம் அடைந்து வரும் நிலையில், சமீபத்தில் கோவை மத்திய சிறையிலும் 3 விசாரணை கைதிகள் மரணம் அடைந்தனர்.
அது தொடர்பாக 2 சிறை வார்டன்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் என்ற விசாரணை கைதி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டி ருந்தார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel