சென்னை:
இந்த ஆண்டு 1500 மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுத தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ள தாகவும், அடுத்தாண்டு முதல் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலத்தில் நீட் தேர்வு மையம் ஒதுக்காமல், தமிழகத்திலேயே ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீட் தேர்வு இயக்குனர் சான்யா பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை 1500 மாணவர்களுக்கு நீர் தேர்வு மையங்களை கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில் ஒதுக்கி உள்ளது சிபிஎஸ்இ.
இது தமிழக மாணவர்களிடையே கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், சென்னை உயர்நீதி மன்றம், சிபிஎஸ்இ உத்தரவுக்கு தடை விதித்த நிலையில், உச்சநீதி மன்றம் சிபிஎஸ்இக்கு ஆதரவாகவே தீர்ப்பு கூறியது.
இதன் காரணமாக தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்வதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன.
இந்நிலையில், தமிழக மாணவர்களுக்கு உதவ பலரும் முன்வந்துள்ள நிலையில், மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்வதிலும், பஸ், ரெயில்களில் இடம் கிடைப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் இடம் ஒதுக்கியது குறித்து, நீட் இயக்குனர் சன்யாம் பரத்வாஜ் கூறியதாவது,
கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 82 ஆயிரம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்ததாகவும், அவர்களுக்கு தேர்வு மையங்களை தமிழகத்திலேயே ஒதுக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த ஆண்டு 1 லட்சத்துக்கு 10ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 31 சதவிகிதம் அதிகம் என்பதால், அவர்களுக்கான தேர்வு மையம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறி உள்ளார். இதன் காரணமாகவே அருகிலுள்ள மாநிலங்களில் அவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு முதல் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,
இந்தாண்டு விண்ணப்பம் அதிகமாக வந்திருக்கும் மாநிலங்களில் அடுத்தாண்டு தேர்வு மையங்கள் அதிகரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.