சென்னை:
காவிரி பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்த மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, வரும் 8ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற திமுக ஏற்பாடு செய்துள்ளது.
காவிரி விவகாரத்தில் மத்தியஅரசின் மாற்றாந்தாய் மனப்போக்கு குறித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும், அடுத்தக்கட்ட போராட்ட நகர்வு குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே காவிரி விவகாரம் குறித்து 2 முறை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, தொடர் போராட்டங்களை நடத்தி வந்த திமுக தற்போது மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.