சென்னை:

ன்று மே 1ந்தேதி உலகம் முழுவதும் தொழிலாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில், மே தினத்தையொட்டி,    சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மே தின நினைவுத் தூணுக்கு திமுக செயல்தலைவர்  மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மே தின விழாவில் கலந்துகொள்ள வந்த  மு.க.ஸ்டாலின் சிவப்புச்சட்டை அணிந்து வந்திருந்தார். மே தின நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து  மரியாதை செலுத்திய ஸ்டாலின்,  அங்கு திரண்டிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது,  ”முதன்முறையாக மே தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்தது திமுக தான் என்றும், அதுபோல  மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் மே தின விடுமுறை பெற்று தந்தவர் கருணாநிதி என்று கூறினார்.

தொழிலாளர்களின் நலனில் திமுக எப்போதும் முக்கியத்துவம் செலுத்தும். ”மத்தியிலும் மாநிலத்திலும் தொழிலாளர்கள் விரோத ஆட்சிகளாக உள்ளதால் மக்கள் அதிகம் கஷ்டப்படுகிறார்கள் என்றும்  மத்திய, மாநில ஆட்சிகளை அகற்ற உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றார்.

தற்போது போக்குவரத்து ஊழியர்கள் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருப்பதால் அவதிப்பட்டு வருகிறார்கள் என்ற அவர், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்கும் வரை, திமுக எம்எல்ஏ.க்கள் ஊதிய உயர்வை ஏற்கப்போவ தில்லை என்றும், மத்திய மாநில  இரண்டு அரசுகளும் தொழிலாளர்களுக்கு இதுவரை எதுவும் செய்ததில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.