டில்லி:

ரிசி ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள இந்தியா,  2017-2018ம் நிதியாண்டில் மேலும் 18 சதவிகிதம் அரிசியை ஏற்றுமதிய  அதிகரித்துள்ளது.

வங்கதேசம், இலங்கை போன்ற  ஆசிய நாடுகளில், அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து, அரிசி ஏற்றுமதி, 2017-2018ஆம் நிதியாண்டில், 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த கடந்த 2016-2017ஆம் நிதியாண்டை காட்டிலும், 2017-2018ம் நிதியாண்டில் அதிகரித்துள்ளது என்றும், இதுவரை இல்லாத அளவுக்கு , ஒரு கோடியே 27 லட்சம் டன் அளவிலான அரிசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய்ப்பட்டுள்ளது வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் அபிவிருத்தி ஆணையம் தெரிவித்துள்ளது.

அதுபோல, மாட்டிறைச்சிக்கு தடை விலக்கப்பட்டுள்ள நிலையில், அதன்  ஏற்றுமதியும் 2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அரிசி ஏற்றுமதியில் கடந்த ஆண்டு வரை தெ‌ன்கிழக்கு ஆசிய‌நாடான தாய்லாந்து முன்னணியில் இருந்து வந்தது. தற்போது, தாய்லாந்தை  பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

மேலும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு  இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 34% உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.