மயிலாடுதுறை:
ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் தகுதி நீக்கி உத்தரவிட்டிருந்தால், ஈபிஎஸ் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
கட்சி கொறடா உத்தரவை மீறி ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தது குறித்து, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை, சட்டமன்ற விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அளித்த 11 எம்எல்ஏக்கள் சம்பந்தமான வழக்கில் சபாநாயகர் முடிவெடுத்த பின்னரே நீதிபதிகள் தலையிட முடியும் என்று கூறியுள்ளனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாக கூறினார். அங்கு இதை பார்த்துக்கொள்ளலாம் என்றார்.
மேழம், இந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக ஈபிஎஸ் வெளியில் சொல்லியுள்ளார். ஆனால் ஓபிஎஸ் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் ஈபிஎஸ் அதிகம் மகிழ்ச்சியடைந்திருப்பார் என்றும், என்னை தனிமைப்படுத்துவேன் என்ற திவாகரனின் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்.
இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.