லண்டன்:
ரூ.9 ஆயிரம் வரை வங்கிகளில் கடன் மோசடி செய்த விஜய்மல்லையா லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரிட்டனில் தேடப்படும் நபராக அறிவிக்கப்படும் வெளிநாட்டவர், உச்ச நீதிமன்றம் வரை அணுகுவதற்கு அந்நாட்டு சட்டத்தில் இடம் உள்ளது.

இந்திய தூதரகம், வெளியுறவுத்துறை, சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு என அனைத்து தரப்பினரும் மல்லையாவுக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர். லண்டன் நீதிமன்றத்தில் இந்தியா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மல்லையாவிற்கு எதிரான ஆவணங்களை லண்டன் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இது மல்லையாவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவாக கருதப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel