சென்னை:
சென்னையை சேர்ந்த திரைத்துறை பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா, திரைப்பட இயக்குனரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். நடிகர் ரஜினிகாந்தின் ஒப்புதலுடன் தான் கஸ்தூரி ராஜாவுக்கு கடன் கொடுத்ததாக கூறியிருந்தார்.

‘‘தன்னிடம் பணம் பறிக்க முகுந்சந்த் போத்ரா முயற்சிக்கிறார்’’என ரஜினி கூறியிருந்தார். ‘‘இந்த குற்றச்சாட்டு தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது’’ என்று ரஜினிக்கு எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் முகுந்சத் போத்கரா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ரஜினி ஜூன் 6ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
Patrikai.com official YouTube Channel