டில்லி:
ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகளை மத்திய தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த கீர்த்திவாசன் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார். 2017-ம் ஆண்டில் யு.பி.எஸ்.சி தேர்வு நடைபெற்றது. இதில் 13 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் 2,567 பேர் தேர்ச்சி பெற்றனர்.

நேர்முகத் தேர்வில் பங்கேற்ற 2,567 பேரில் 990 பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஃஎப்.எஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ் தேர்வில் திருச்சி கீர்த்திவாசன் அகில இந்திய அளவில் 27வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். தமிழக அளவில் மதுபாலன் 2-ம் இடமும், இந்திய அளவில் 71வது இடமும் பிடித்தார்.
Patrikai.com official YouTube Channel