மும்பை:
கடந்த 21 ஆண்டுகளுக்கு உலக அழகி பட்டம் வென்ற டயானா ஹெய்டன் அந்த பட்டத்திற்கு தகுதியற்றவர் என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் டெப் விமர்சனம் செய்திருந்தார். மேலும் அழகி போட்டிகளின் முடிவுகள் முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்படுகிறது.

அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. இதனால் தலை பொடுகை போக்க இலைகளை பூசிய இந்திய பெண்கள் தற்போது பியூட்டி பார்லர்களை நாடி செல்கின்றனர் என்று அவர் கூறியிருந்தார்.
இதற்கு சமூக வலை தளங்களில் கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் இது குறித்து டயானா கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘‘எனது பிரவுன் நிற தோலுடன் நான் சிறு வயதில் இருந்து போராடி வெற்றி பெற்றுள்ளேன். இதன் மூலம் நான் பெருமை அடைந்துள்ளேன்.
எனது சாதனையை மக்கள் பெருமையாக கருத வேண்டும். அதை சிறுமைபடுத்தக் கூடாது. நான் பிரவுன் தோல் கொண்ட இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன். நான் காயப்படுத்தப்பட்டுள்ளேன். முதல்வர் பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் பேச வேண்டும்’’ என்றார்.
[youtube-feed feed=1]