லண்டன்:

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேத்தரின் மிடில்டன் தம்பதிக்கு கடந்த 22ம் தேதி 3வது ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.

புதிய வாரிசு பிறந்திருப்பதன் மூலம் இங்கிலாந்து மன்னர் குடும்பம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். அரண்மனை வளாகம் முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது. புதிதாக பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுதலை உலகமே எதிர்பார்த்து காத்திருந்தது. இதற்கென சூதாட்டங்களும் பல நாடுகளில் அரங்கேறியது.

இந்நிலையில புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு ‘லூயிஸ் ஆர்தர் சார்லஸ்’ என்று தம்பதியர் பெயரிட்டுள்ளனர். இந் தம்பதியருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]