பான்முன் ஜோம்
தென் கொரியாவின் தலைநகருக்கு தம்மை அழைத்தால் வரத் தயார் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
வட கொரிய அதிபரும் தென் கொரிய அதிபரும் இன்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த சந்திப்பில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் மூன் ஜே இன் ஆகியோர் தனித்து உரையாடி உள்ளனர்.
அந்த உரையாடலின் போது மூன் ”நீங்கள் எனது இருப்பிடமான நீல மாளிகைக்கு வந்தால் நான் உங்களை இன்னும் நன்கு கவனிப்பேன். சியோல் வருவீர்களா?” எனக் கேட்டுள்ளார்.
அதற்கு கிம், “நிஜமாகவா? எனக்கு அழைப்பு விடுத்தால் நான் நிச்சயம் சியோல் வர தயாராக உள்ளேன். நீல மாளிகைக்கு அப்போது வருகிறேன்” என பதில் அளித்தார்.
அத்துடன் தென் கொரியாவுக்கு வந்துள்ள கிம் இடம், “நீங்கள் எல்லை தாண்டி வந்தது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இனி நாமும் எல்லை தாண்டலாம் தானே?” எனக் கேட்டார்.
அதற்கு கிம், “எல்லைக் கோடு அப்படி ஒன்றும் உயரமாக இல்லை. அதன் மேல் நமது இரு நாட்டு மக்களும் அடிக்கடி நடந்தால் சமம் ஆகி விடும்” என பதில் அளித்துள்ளார்.