
பழம்பெரும் பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி, உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் இரங்கல் தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.
அதில், களத்தூர் கமலை மக்களுக்குக்கொண்டு சேர்த்தது அம்மாவும் நீயே என்ற பாடலும் தான். அதைப்பாடிய அம்மையார் எம்.எஸ்.ராஜேஸ்வரி நம்மை விட்டு அகன்றார். அவர் ரசிகர்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
என்று பதிவிட்டுள்ளார்.
பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி திரையுலகில் ஏராளமான பாடல்கள் பாடி உள்ளார். குழந்தைக்குரலிலான பெரும்பாலான பாடலுக்கு இவரே சொந்தக்காரர்.
Patrikai.com official YouTube Channel