சென்னை:

ஜெயலலிதாவின் ரத்த மாதிரி தங்களிடம் இல்லை என்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  மகள் என கூறி  அம்ருதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். ஜெயலலிதாவின் ரத்த மாதிரியையும் தனது ரத்த மாதிரியையும் வைத்து டி.என்.ஏ. சோதனை செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு  விசாரணைக்கு வந்தபோது,  ஜெயலலிதாவின் ரத்தமாதிரிகள் மற்றும் உயிரியல்(டிஎன்ஏ) மாதிரிகள் பாதுகாப்பாக உள்ளதா என்பகு குறித்து பதிலளிக்க  அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கால் அவகாசம் கேட்டது.  இதற்கு அனுமதி மறுத்த நீதிமன்றம், இன்று ரத்தமாதிரி குறித்த விபரங்களை அளிக்க உத்தரவிட்டது.

இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் ரத்த மாதிரி தங்களிடம் இல்லை என்று அப்பல்லோ மருத்துமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாநில முதல்வராக இருந்த ஜெயலலிதா நீண்ட நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மறைந்தார். அப்படி இருக்கையில், அவரது ரத்த மாதிரி கூட மருத்துவமனையில் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

[youtube-feed feed=1]