டாக்கா:
பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சாலைப்பகுதியை பயன்படுத்திகொள்ள கடந்த 2015-ம் ஆண்டு மோட்டார் வாகன ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதையடுத்து நேபாள் தலைநகர் காத்மாண்டு, பங்களாதேஷ் தலைநகர் டாக்கா இடையிலான பஸ் போக்குவரத்து சேவையின் சோதனை ஓட்டம் இன்று டாக்கா நகரில் தொடங்கியது.
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி மாவட்டம் வழியாக சுமார் 1,200 கிலோமீட்டர் தூரம் செல்லும் இந்த பஸ்சில் பங்களாதேஷை சேர்ந்த 25 பயணிகளும், 12 இந்தியர்களும், 6 நேபாளிகளும் முதன்முதலாக சென்றனர். இந்த பஸ் வரும் 26-ம் தேதி காத்மாண்டு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.