பெங்களூரு:
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மே 12ந்தேதி நடைபெற்ற உள்ள அங்கு தேர்தல் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியது.
அதில், கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும், தொங்கு சட்டமன்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், ஆட்சி செய்யப்போவது யார் என்பதை நிர்மாணிக்கும் இடத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இருக்கும் என்று கூறி உள்ளது.
ஏற்கனவே தனியார் நிறுவனமான சி-ஃபோர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த 2013ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகளை விட அதிக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று தெரிவித்திருந்தது.
ஆனால், அதைத்தொடர்ந்து, இந்தியா டுடே-கார்வி நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காது என்று கூறியிருந்தது. அதன்படி, காங்கிரசுக்கு 90 முதல் 101 இடங்களும், பாஜகவுக்கு 78 முதல் 96 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் கூறியிருந்தது.
மேலும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை பலமான 112 இடங்களை எந்தக் கட்சியாலும் அடைய முடியாத நிலை ஏற்பட்டு விடும் 34 முதல் 43 இடங்கள் வரை வெற்றிவாய்ப்பை வைத்துள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கிங் மேக்கராக செயல்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா டுடேவின் கருத்துக்கணிப்பை ஊர்ஜிதம் செய்யும் வகையிலேயே தற்போதைய டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பும் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபைத் தேர்தல் வரும் 12 ம் தேதி நடைபெறவுள்ளது. மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அங்கேயே தனியாக வீடு எடுத்து தங்கியிருந்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
காங்கிரசுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஏற்கனவே பல கட்ட பிரசாரங்களை மேற்கொண்டு வந்துள்ள நிலையில் மீண்டும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
அதுபோல முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கும் ஓரளவு செல்வாக்கு உள்ளது. அந்த கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, குமாரசாமி ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தற்போது டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிறுவனம், விஎம்ஆர் நிறுவனத்துடன் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டு உள்ளது.
இதில் மொத்தமுள்ள 224 இடங்களில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் 91இடங்களிலும், பாஜக 89 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறி உள்ளது.
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 112 இடங்கள் தேவையான நிலையில், தற்போதைய கருத்துக்கணிப்பு கள் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலையே தெளிவுபடுத்தி வருகின்றன.

இதனால் தொங்கு சட்டசபையே அமைய வாயப்பு இருப்பதாக வும், இந்த சூழ்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி யின் தலைவர் குமாரசாமி, எந்த கட்சியின் ஆட்சி வேண்டும் என்பதை நிர்மாணிக்கும் கிக் மேக்கராக செயல்படுவார் என்றும் கூறி உள்ளது.
மராட்டிய மாநில எல்லை பகுதியில் வாழ்ந்து வரும் லிங்காயத் சமூக மக்களை குறித்து காங்கிரசும், பாரதிய ஜனதாவும் பல்வேறு சலுகைகளை அளித்து வரும் நிலையில் அந்த மக்களின் ஆதரவு எல்லா கட்சிக்கும் பிரிந்து செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பெங்களூரு நகர் பகுதியில் பாஜக மூன்றில் இரண்டு மடங்கு வெற்றி கிடைக்க வாய்ப்பி இருப்பதாகவும் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
மேலும் மாநிலம் முழுவதும் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு குறிப்பிட்ட அளவிலான ஆதரவு தொடர்ந்து வருவதால், அந்த கட்சியும் கணிசமான இடங்களை கைப்பற்றும் என்றும் கூறி உள்ளது.
இதன் காரணமாக, அடுத்து அமைக்கமுயற்சிக்கும் கட்சிக்கு, குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு கிடைத்தால் மட்டுமே முடியும் என்றும், அவரது ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைச்ச முடியாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]