பாரீஸ்:
கடந்த 2015ம் ஆண்டு பாரீஸ் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஜிகாதிஸ்ட்கள் சாலா அப்தேஸ்லாம் (வயது 28) மற்றும் சோபியான் அயாரி (வயது 24) ஆகியோரை புரூசேல்ஸ் போலீசார் 2016ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

வனப்பகுதியில் உள்ள ஒரு ப்ளாட்டில் போலீசார் நடத்திய சோதனையின் போது சிக்கிய அப்தேஸ்லாம் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில் 4 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.
போலீசாரை சுட்டது தொடர்பான வழக்கின் விசாரணை பெல்ஜியம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சாலா அப்தேஸ்லாமுக்கு கொலை முயற்சி பிரிவின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இவன் மீதான பாரீஸ் தாக்குதல் வழக்கு விசாரணை தனியாக நடந்து வருகிறது. இதில் அப்தேஸ்லாம் மட்டுமே உயிரோடு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]