சென்னை:
தமிழ் நாட்டுக்கு உற்ற நண்பர்களாகவும், தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய இருப்பவர்களுடன்தான் எங்களின் உறவு இருக்கும் என்றும், தமிழக மக்களுக்கு எதிராக இருக்கும் பாரதிய ஜனதாவுடன் கூட்டு சேர வாய்ப்பு இல்லை என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், புரட்சித்தலைவி அம்மா நாளிதழில் வெளியான கட்டுரை குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர், அ.தி.மு.க நாளிதழில் கட்டுரை எழுதியவர் பா.ஜ.கவுடன் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
“நமது புரட்சித் தலைவி அம்மா” நாளிதழில், அதிமுகவும், பாஜகவும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்படுகின்றன என வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
அதை கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அ.தி.மு.க.வை அம்மா எப்படி கட்டுக்கோப்பாக நடத்தினாரோ அதே கட்டுக் கோப்புடன் இன்றைக்கும் நடத்தப்படுகிறது. கூட்டணி குறித்து தனிப்பட்ட ஒருவர் முடிவு செய்ய முடியாது என்று கூறினார்.
மேலும், தமிழக நலன்களை புறக்கணிக்கும் மத்திய அரசை எதிர்ப்பீர்களா? என்ற கேள்விக்கு. தமிழகத்தின் நலன்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்தால் நாமும் தொடர்ந்து எதிர்ப்போம் என்று கூறினார்.
அதிமுகவுக்கு. தமிழகத்தின் நலன்தான் நமக்கு முக்கியம். தமிழக மக்களுக்கும், தமிழகத்துக்கும் எதிராக இருப்பவர்களுடன் நாம் எப்படி உடன்பாடு வைத்துக் கொள்ள முடியும். தமிழ் நாட்டுக்கு உற்ற நண்பர்களாகவும், தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய இருப்பவர்களுடன்தான் எங்களின் உறவு இருக்கும் என்று கூறினார்.
மேலும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என்று ஸ்டாலின் பேசியது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதில் அளித்த அமைச்சர், அவர் சொல்வதை பார்க்கும்போது கடல் வற்றி கருவாடு சாப்பிடலாம் என்று நினைத்த கொக்கு குடல் வற்றி இறந்த கதைதான் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.
எப்ப கடல் வற்றுவது, எப்போது கருவாடு சாப்பிடுவது. தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது என்று கூறினார்.
மேலும், அம்மாவின் அரசை வெளிப்படையான நிர்வாகம் என்ற அளவில் நடத்திக் கொண்டிருக்கிறோம். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். காமாலை கண்டவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல அவர்களுக்கு அதே பார்வை தான் இருக்கிறது என்றார்.
காவிரிக்காக ஜனநாயக ரீதியில் யார் வேண்டுமானாலும் போராடலாம். தி.மு.க. போராடுவதை விமர்சிக்க மாட்டேன் என்றும் ஜெயக்குமார்.
இவ்வாறு அவர் கூறினார்