டேராடூன்

டந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் காடுகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக இந்திய காடுகள் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் காடுகள் அழிக்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது,  இவ்வாறு காடுகள் அழிக்கப்படுவதால் பூமி வெப்பமயமாகிறது.   மேலும் மழை அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.   நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அடைவது மேலும் அதிகரிக்கிறது.   அத்துடன் காட்டு விலங்குகள் நாட்டினுள் நுழைந்து மக்களுக்கு இடர் விளைவிக்கின்றன.

இதை ஒட்டி இந்திய காடுகள் ஆராய்ச்சி மையம் நாட்டில் காடுகளின் வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது.  பல மாநிலங்களில் காடுகளின் வளர்ச்சி அதிகம் உள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்புக்கு பின் இந்த மையம் தெரிவித்துள்ளது.   இந்த மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வு குறித்து மையத்தின் இயக்குனர் சைபால் தாஸ்குப்தா சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை டேராடூனில் நிகழ்த்தினார்.

அந்த சந்திப்பில், “இந்தியாவில் காடுகளின் வளர்ச்சி கடந்த 2 ஆண்டுகளில் 6778 சதுர கி மீ பரப்புக்கு அதிகரித்துள்ளது.    அதில் ஆந்திரப் பிரதேசத்தில் 2141 ச கீமீ,  கர்நாடகாவில் 1101 ச கி மீ. கேரளாவில் 1043 ச கி மீ அளவுக்கு அதிகரித்துள்ளது.  நாட்டில் 15 மாநிலங்களில் 33% அதிகமாக காடுகள் பரவி உள்ளன.   மொத்தமுள்ள வனப் பகுதிகளில் 283462 ச கி மீ பரப்பளவு மலைகளில் அமைந்துள்ளது.

சராசரியாக ஒவ்வொரு மலை மாவட்டங்களிலும் 754 ச கி மீ அளவுக்கு காடுகள் அதிகரித்துள்ளன.    வடகிழக்கு பகுதிகளில் மட்டுமே காடுகளின் பரப்பளவு குறைந்து வருகிறது.   அதே போல உத்திரப் பிரதேசம், அரியானா, அருணாசலப் பிரதேசம், மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் காடுகளின் பரப்பளவில் மாற்றம் இல்லை.    மேலும் தற்போது அதிகரித்துள்ள வனப்பகுதிகளில் அதிகமாக முங்கில் மரங்களே காணப்படுகின்றன என தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.