அவைத்தலைவருக்கு இது போன்ற தீர்மானங்களை ஏற்கவோ நிராகரிக்கவோ அதிகாரம் உண்டு.
நியூயார்க்: தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பு ஒன்று மொத்தமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
ஆங்கில தொலைக்காட்சி தொடர் இயக்குநர்களில் முக்கியமானவரான டேரன் ஆரோன்ஸ்கி ”ஒன் ஸ்ட்ரேன்ஜ் ராக்” என்ற தொடரை இயக்கி வருகிறார்கள். இதில் சில காட்சிகள் விண்வெளி ஓடத்தில் படமாக்கப்பட்டுள்ளன.
இதற்காக நாசா விஞ்ஞானிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த தொடர் கடந்த மாதம் வெளியானது. மொத்த தொடரில் சில மணி நேரம் மட்டுமே, இந்த விண்வெளி காட்சிகள் வருகின்றன. ஆனால் அதற்காக நாசா விஞ்ஞானிகள் மிகவும் பிரயத்தனப்பட்டு உள்ளனர்.
பூமியில் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது என்பதை வெளிப்படுத்தும் விதமாக வானத்தில் நடக்கும் நிகழ்வுகளை, படமாக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக செட் போடாமல் உண்மையாக விண்வெளி ஓடத்தில் படம் எடுக்க திட்டமிடப்பட்டது. முதலில் தொடர் இயக்குநரே வானத்தில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு செல்ல விரும்பினார். ஆனால் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பாவ்லோ நெஸ்போலி, பேகி விட்சன் என்ற இரு விண்வெளி ஆகிய விஞ்ஞானிகளுக்கு படப்பிடிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
அவர்களுக்கு பூமியில் இருந்து வீடியோ கால் மூலம் 12 மணி நேரம் வீரர்களுக்கு பயிற்சி அளித்தார் இயக்குநர். கேமரா எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொடுக்கப்பட்டது. அதேபோல் எங்கு லைட் வைக்க வேண்டும், வானத்தில் எந்த கோணத்தில் எடுத்தால் சரியாக படம்பிடிக்க முடியும், எப்படி வசனம் பேச வேண்டும் என்று படம் எடுப்பதற்கான எல்லா விஷயமும் வீடியோ கால் மூலம் சொல்லப்பட்டது.
பிறகு இங்கிருந்து, உணவு மற்றும் எந்திர உபகரணங்கள் அனுப்பும் ராக்கெட்டில் கேமராவும் அனுப்பப்பட்டது. ஆனால் கேமரா அங்கு சென்ற பின் வேலை செய்யவில்லை. பிறகு கேமராவை எப்படி சரி செய்ய வேண்டும் என்று வீடியோ கால் மூலம் கற்றுக் கொடுக்கப்பட்டது. மொத்தமாக அரை மணி நேரம் வரக்கூடிய அந்த சீனுக்காக, அவர்கள் மொத்தம் 10 நாட்கள் படம் பிடித்தனர்.
வானத்தில் எப்படி பல் துலக்குவார்கள் என்பது தொடங்கி எப்படி தூங்குவார்கள், என்ன சாப்பிடுவார்கள், என்ன மாதிரியான ஆராய்ச்சி செய்வார்கள், மனிதர்களிடத்தில் இருந்து எப்படி வித்தியாசப்பட்டு இருப்பார்கள் என்று எல்லா விஷயங்களும் இந்த அரைமணி நேர காட்சியில் சொல்லப்பட்டிருக்கிறது.