
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் கழிப்பறை இல்லாத அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை நிறுத்தி மாநில அரசு உத்த ரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் ஸ்வாச் பாரத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. நாட்டை சுத்தமாக்கும் வகையில் திறந்தவெளி கழிப்பிடத்தை முழுவதுமாக அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், காஷ்மீரில் கழிப்பறை இல்லாமல் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வந்த அரசு ஊழியர்கள் 616 பேருக்கு சம்பளத்தை நிறுத்தி வைக்க மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
ஸ்வாச் பாரதி திட்டத்தின் மூலம் ஜம்மு-காஷ்மீரில் 71 சதவீதம் வீடுகளில் கழிப்பறை வசதி செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை இருக்கிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், கிஸ்த்துவார் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் 616 வீடுகளில் கழிப்பறை இல்லாதது தெரிய வந்தது. அரசு ஊழியராக இருந்து கொண்டு அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பது கொடுமை யானது, வெட்கக்கேடானது என்று கூறப்பட்டது.
இதன் காரணமாக 616 அரசு ஊழியர்களும் தங்களது வீடுகளில் கழிப்பறை கட்டும் வரை ஊதியம் வழங்கப் படாது என காஷ்மீர் மாநில கிஸ்த்துவார் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் அதிரடி ஆணையை பிறப்பித்துள்ளார்.
இது அரசு ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]