திருப்பதி

திருப்பதி தேவஸ்தான குழுவில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் பெண்  சட்டமன்ற உறுப்பினர் தாம் கிறித்துவர் அல்ல என மறுத்துள்ளார்.

திருப்பதி தேவஸ்தானக் குழுவின் பட்டியலை நேற்று ஆந்திர அரசின் இந்து அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது.   அதில் தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அனிதா உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் அனிதா பேசியதாக ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.  அந்த வீடியோ முகநூல் மற்றும் வாட்ஸ்அப் தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அனிதா, “நான் ஒரு கிறித்துவர்.  எப்போதும் நான் இரு பைபிள் புத்தகங்களை வைத்திருப்பேன்.    ஒன்று எனது கைப்பையிலும் மற்றொன்று எனது காரிலும் எப்போதும் இருக்கும்.   அது இல்லாமல் நான் வெளியே கிளம்ப மாட்டேன்”  என சொல்கிறார்.    இதை சுட்டிக்காட்டி பலரும் ஒரு கிறித்துவப் பெண்ணை எவ்வாறு இந்துக் கோயிலில் தேவஸ்தானக் குழு உறுப்பினர் ஆக்க முடியும் என அரசை கேட்டுள்ளனர்.

அதற்கு அனிதா, “எனது தாய், தந்தை,  மற்றும் கணவர் ஆகியோர் இந்து தலித் வகுப்பான மடிகா வகுப்பை சேர்ந்தவர்கள்.    பொதுவாக தலித்துகள் என்றாலே கிரித்துவர்கள் என கூறுகின்றனர்.   அதே போல் எனது உறவினர்களில் கிறித்துவர்களும் உள்ளனர்.   ஆனால் எனது தாயோ தந்தையோ மதம் மாறவில்லை.   இந்த விடியோவை ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே வெளியிட்டுள்ளது.

நான் ஒரு ஆசிரியை என்பதால் அனைத்து புத்தகங்களையும் படிப்பேன்.  அவ்வாறு மத சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் படித்துள்ளேன்.  அந்த வகையில் நான் பைபில், குரான் மற்றும் பகவத் கீதையையும் படித்து இருக்கிறேன்” என செய்தியாள சந்திப்பில் பதில் அளித்துள்ளார்.   மேலும் தான் பலமுறை திருப்பதி சென்ற புகைப்படங்களையும் தனதுபள்ளிச் சான்றிதழையும் காட்டி தாம் இந்து என்பதற்கு இவை எல்லாம்  ஆதாரம் என தெரிவித்துள்ளார்.

[youtube https://www.youtube.com/watch?v=PfFeZmAG94c]