சென்னை
நடிகர் கமலஹாசன் ’யு டியூப்’ வழியாக மக்களிடம் பேசி உள்ளார்.
நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். அவர் இணையத்தின் மூலம் மக்களை தொடர்பு கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். தனது கட்சியை ஆரம்பிக்கும் முன்னரே தனது டிவிட்டர் பகுதிகளின் மூலம் அரசியல்வாதிகளையும் பல சமூக சீர்கேடுகளையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இன்று அவர் ’யு டியூப்’ இணைய தளம் மூலம் நேரலையில் மக்களுடன் பேசி உள்ளார்.
அப்போது அவர்,
“நீர்நிலைகலை சுத்தப் படுத்த வேண்டியது மக்களாகிய நமது கடமை.
குடிநீர் பிரச்னையை யாராலும் மறக்க முடியாது.
மக்கள் ஆதரவு அளித்தால் தான் கிராமத்தை தத்து எடுக்க முடியும்
இளைஞர்கள் நினைத்தால் எந்த ஒரு போராட்டத்திலும் ஈடுபடாமல் உரிய அழுத்தம் அளிக்க முடியும்.
ஆண் குழந்தைகளை பொறுப்புடன் வளர்த்தால் பாலியல் தொல்லைகள் ஒழ்யும்.
ஆட்சியாளர்களின் ஆணவப் போக்குக்கு ஒரு தீர்வு காணவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன்”
என தெரிவித்துள்ளார்.