
டில்லி:
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நள்ளிரவு வீடு திரும்பிய நிலையில் இன்று மத்திய அமைச்சரவை அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று பகல் 12 மணி அளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சிறுமிகள் வன்புணர்வு மற்றும் எஸ்சி., எஸ்.டி. சட்ட திருத்த மசோதா, காவிரி பிரச்சினை, சிறுமிகளுக்கு கொடூரம் இழைக்கும் குற்றவாளிகளை தூக்கும் போடும் வகையில் புதிய சட்ட திருத்தம் போன்றவை குறித்து இன்று விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]