இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 8 மாத பச்சிளங்குழந்தை வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி பதிவு கைப்பற்றப்பட்டுள்ளது.
சாலையோரங்களில் பலூன் விற்பனை செய்துவரும் தம்பதி சாலையோரத்தில் இரவில் தங்கள் 8 மாத குழந்தை யுடன் தங்கியுள்ளனர். அவர்களின் குழந்தையை தூக்கி சென்ற ஒருவர் வன்கொடுமை செய்து கொலை செய்து அருகிலுள்ள வணி வளாக பகுதியில் வீசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தகவல்கள் அறித்த போலீசார் உடடினயாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவை வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து, இந்தூர் காவல்துறை அதிகாரி ஹரிநாராயணசாரி கூறும்போது, கைப்பற்றப் பட்டுள்ள சிசிடிவி பதிவில் அதிகாலை 4.45 மணி அளவில் இந்த கொடூரம் நடைபெற்றுள்ளது என்று கூறினார்.
மேலும் குழந்தையின் பெற்றோர்கள் சாலையோரங்களில் பலூன் விற்பனை செய்து வருபவர்கள் என்றும், அவர்கள் இரவில் அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது, சுமார் 21 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அவர்களிடம் இருந்து தூங்கிக்கொண்டிருந்த 8 மாத குழந்தையை தூக்கிச்சென்று, 50 அடி தூரத்தில் இருந்த காலியான இடத்தில் வைத்து, வன்கொடுமை செய்து கொலை செய்து போட்டு சென்றது சிசிடிவி பதிவில் தெரிய வந்துள்ளது என்று கூறினார்.
இந்த சம்பவம் நடைபெற்ற இடம், இந்தூரின் ராஜ்வாடா என்ற குடியிருப்பு பகுதி என்றும், அந்த பகுதி வணிக வளாக கடைக்காரர் ஒருவர் கடையை திறக்க வந்தபோது, வணிக வளாகத்தின் அடியில், கைக்குழந்தை ஒன்று ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளதை கண்டு புகார் தெரிவித்ததை தொடர்ந்தே இந்த கொடூர சம்பவம் தெரிய வந்துள்ளது என்றார்.
மேலும், குழந்தையின் உடல்கூறு மருத்துவ சோதனையில் குழந்தையின் தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ள தால் மரணித்துள்ளதாகவும், இறப்பதற்கு முன்பு வன்கொடுமைக்கு தூண்டப் பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் முழுவிவரங்கள் கண்டறியப்படும் எனவும் அவர் தெரிவித்ததுள்ளார்.
சமீபத்தில் காஷ்மீர் கத்துவா சிறுமி, சூரத்தில் 11 வயது சிறுமி, உ.பி.யில் 10 வயது பெண் குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் வடமாநிலங்களில் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது மத்திய பிரதேசத்தில் 8 வயது பச்சிளங்குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டி ருப்பது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.