சென்னை:

ன்று தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைகளில் உள்ள குளறுபடிகளை நீக்கும் வகையில் முகாம் நடைபெறுகிறது.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மாற்றங்களை குடும்ப அட்டையில் செய்துகொள்ள இன்றைய முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த குறைதீர்ப்பு முகாம்கள் ஒவ்வொரு வருவாய் வட்டங்கள் வாரியாக நடைபெறுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் ரேஷன்  பெயர், முகவரி மாற்றம் ஆகியவற்றை செய்வதோடு, ரேஷன் கடைகளின் குறைகள் குறித்தும் தெரிவிக்கலாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  மேலும்  விற்பனை செய்யப்படும் பொருட்கள் குறித்தும் புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ளலாம்.