சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள், பாஜக நிர்வாகிகள் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோரின் வக்கிரமான சமூகவ வலைதள பதிவுகள்,  அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தவரை நியமனம் செய்வததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேமுதிக மற்றும் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இன்று கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகை போராட்டத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார். நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்களை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

போராட்டத்தின்போது, ஹெச்.ராஜா மற்றும் எஸ்.வி. சேகரை கண்டித்து முழக்கமிட்டனர்.

ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 18-ந் தேதி போராட்டம் நடத்தப் போவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து 20-ந்தேதி கவர்னர் மாளிகை நோக்கி தே.மு.தி.க. பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]