லக்னோ:

கில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  உத்தரப்ப்பிரதேசம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவருக்கு விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

உ.பி. மாநிலம் அமேதி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக ராகுல்காந்தி உள்ளார். தனது தொகுதியில்  நடைபெற்றுவரும் நலத்திட்டங்களை பார்வையிடவும், மக்களின் குறைகளை கேட்டறியவும் அமேதியில்  3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று முதல்நாள் சுற்றுப்பயணமாக விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். விவசாயிகளுடன் கலந்துரையாடினார். மேலும், கோட்வா கிராமத்தில் உள்ள தவுரி கிராமத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகளும் பார்வையிட்டார். வேலைகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடவேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

அமேதி பாராளுமன்ற தொகுதியில் ஜெயின்ப்கஞ்ச் பகுதி விவசாயிகளுடன் பேசிய ராகுல்காந்தி, மோடி அரசாங்கம், 5 முதலாளிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி கடன் கொடுத்துள்ளது. ஆனால்,  ஆனால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று  நிதி அமைச்சர் அருண் ஜேட்லி  சொல்கிறார். விவசாயிகளுக்கு உதவி இல்லை என்று கூறு மோடி அரசை கடுமையாக தாக்கி பேசினார்.

ராகுல்காந்தி செல்லும் இடங்களிலும் எல்லாம் அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து தனது தாயின் தொகுதியான ரேபரேலி தொகுதியிலும் சுற்றுப்பயணம் செய்ய ராகுல்காந்தி திட்டமிட்டு உள்ளார்.

இந்நிலையில், இன்று அமேதி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.