சென்னை:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அம்பேத்கர் பிறந்த இந்த நல்ல நாளில் அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழிநடக்க உறுதி ஏற்போம்.

அரசியல்சாசனத்தை பின்பற்றி தமிழர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என முழங்குவோம். தமிழர் தமிழால் இணைவோம். நாளை நமதே’’ என்று தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]