
மும்பை:
கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி தனது சாவுக்கு பிரதமர் மோடிதான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருக்கும் சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பல மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் யவத்மால் மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் உள்ள ராஜூர்வாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஷங்கர் பாவ்ராவ் சாயிரே. (வயது 50)
நேற்று காலை தனது விவசாய நிலத்திற்கு சென்றவர், அங்குள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். ஆனால், தூக்குக்கயிறு அறுந்துபோனது. பிறகு வீட்டிற்கு வந்த அவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
உயிரிழந்த விவசாயி ஷங்கர், பருத்தி விளைச்சலுக்காக 3 லட்சம் வரை கடன் பெற்றிருக்கிறார். விளைச்சலுக்கு முன்பாக பிங்க் புழுக்களால் பருத்தி சாகுபடி வீழ்ச்சியடைந்தது. இதனால் போதிய வருமானமின்றி கடும் பண நெருக்கடியில் இருந்தார்.
கடன்பிரச்சனையில் இருந்து மீள பல்வேறு அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளைச் சந்தித்தும் பலனில்லாத சூழலில் தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொள்ளும் முன்பாக தனது சாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
விவசாயி ஒருவர் தனது சாவுக்கு பிரதமர் மோடிதான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]