ஓடும் பேருந்தில் இருந்து குதித்த இளைஞர் செல்வம்

நெல்லை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, மத்திய அரசுக்கு எதிராக ஓடும் பேருந்தில் இருந்து குதித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, ஓடும் பேருந்தில் இருந்து இளைஞர் செல்வம் என்பவர் கடந்த 5ந்தேதி குதித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்து செல்வம் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.