நெட்டிசன்:

டி.வி.எஸ். சோமு அவர்களின் முகநூல் பதிவு:

1997 இல்லேனா 98… குமுதத்தில வேலை செய்யறப்பதான் ஆச்சரியமான ஒரு விசயம் எனக்கு தெரிஞ்சுது.. சென்னை மாநகரத்துக்குள்ள ஒரே ஒரு தனியார் மாநகர பேருந்து ஓடுது அப்படின்னு. அப்புறம் விசாரிச்சதில, பிராட்வே – பூந்தமல்லி ரூட்ல ஓடற 54 டி பஸ்தான் அதுன்னு தெரிஞ்சுது.

1970களின் ஆரம்பத்துல கருணாநிதி ஆட்சயில பேருந்துகளை அரசுடமையாக்கினாரு. அப்ப கோர்ட்ல கேஸ்போட்டு தப்பி்ச்சது இது மட்டும்தான்.

அசப்புல அரசு பஸ் மாதிரியே இருக்கும். வித்தியாசம் தெரியக்கூடாதுனு முதலாளி உத்தரவாம்.

இன்னிக்கு எதிர்பாராம அந்த பஸ்ல வந்தேன். இப்ப கொஞ்சம் வித்திசமான பெயிண்ட்டிங். முன்னால போட்டோ எடுக்கலாம்னா டிரைவரு பதறுறாரு. சரி போன்னு பேக்ல ஒரு கிளிக்.

அதுசரி, எத்தனை பேருக்கு தெரியும்.. இப்படி ஒரு தனியார் பஸ் சென்னைக்குள்ள ஓடுறது