ஜோத்பூர்:
மான்வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அளித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
பிரபல இந்தி நட்சத்திரங்கள் சல்மான் கான், சைஃப் அலிகான், நடிகை தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் 1998 ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஹம் சாத் சாத் ஹே’ பட சூட்டிங் , ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்தது. அப்போது, ஓய்வு நேரத்தின்போது, ’ அங்குள்ள காட்டில் வேட்டைக்குச் சென்றனர். இதில் அரிய வகை மான்களை, நடிகர் சல்மான்கான் வேட்டையாடியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என கூறி விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அதை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணைமுடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, மான் வேட்டையாடி வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என நீதிபதி தேவ்குமார் காத்ரி அறிவித்தார்.
நீதி மன்றம் அவருக்கு 5 ஆண்டு தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. வழக்கில் இருந்து சைஃப் அலிகான், தபு, சோனாலி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.