
ரியாத்
கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் சௌதி அரேபியாவின் ரியாத் நகரில் விஷ எறும்பு கடித்ததால் மரணம் அடைந்துளார்.
கேரள மாநிலம் அடூரை சேர்ந்தவர் சூசி ஜெஃபி. 36 வயதாகும் இவர் சௌதி அரேபியாவில் பணி புரிந்து வருகிறார். சௌதி அரேபியாவில் உள்ள எறும்புகளில் சில வகை எறும்புகள் விஷத்தன்மை கொண்டவை எனக் கூறப்படுகிறது. சூசியை அந்த வகை எறும்பு ஒன்று கடந்த மாதம் 19ஆம் தேதி அவர் வீட்டில் இருந்த போது கடித்துள்ளது.
விஷ எறும்பு கடித்ததால் மயக்கம் அடைந்த சூசி சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் உடல்நிலை சரியாகவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சூசி மரணம் அடைந்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel