சென்னை

டிகர் சங்கம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் கோரிக்கை விடுத்து போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது இரு பிரச்னைகள் தலையாய பிரச்னைகளாக உள்ளது.  அவை காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்காததும் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடக்கும் போராட்டமும் ஆகும்.   இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் இது குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி மற்றும் துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் நேற்று கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளனர்.

அப்போது அந்த சந்திப்பில், “தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் கடும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.    காவிரி நமது வாழ்வாதார உரிமை.   அதே போல் ஸ்டெர்லைட் ஆலை என்பது தூத்துக்குடி மக்களின் பிரச்னை மட்டும் அல்லாது பொதுவான பிர்ச்னை.   தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த இரு கோரிக்கைகளுக்காகவும் போராட்டம் நடத்த உள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் இந்த போராட்டம் உண்ணாவிரதமா அல்லது வேறு வகையிலான போராட்டமா என்பது குறித்து அறிவிக்கப்படும்.   மேலும் இது குறித்து ஒரு ஆவணப்படம் தயாரிப்பது குறித்தும் சந்தம் ஆலோசித்து வருகிறது.   அத்துடன் டிஜிட்டல் கட்டணத்தை குறைக்கக் கோரி தமிழ் திரைப்பட தயாறிப்பாளர்கள் நடத்தும் போராட்டத்துக்கும் அவர்கள் 4 ஆம் தேதி நடத்த உள்ள பேரணிக்கும் சங்கம் முழு ஆதரவை கொடுக்கும்”  என கூட்டாக மூவரும் அறிவித்துள்ளனர்.