தமிழ்த்திரையுலகினர் தங்களுடைய அனைத்துக் கோரிக்கைகளையும் வலியுறுத்தி வரும் ஏப்ரல் 4ம் தேதி பிரம்மாண்ட பேரணி ஒன்றை சென்னையில் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோட்டையை நோக்கிச் செல்லும் இந்தப் பேரணியின் முடிவில், தமிழக முதல்வர் பழனிச்சாமியிடம் மனு அளிக்கப் போவதாக நடிகர் சங்கப் பொதுச் செயலர் விஷால் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி துவங்கியுள்ள கமல், துவங்க இருக்கும் ரஜினி ஆகியோர் கலந்துகொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.