
திருப்பூர்:
திருப்பூர் எம்.பி சத்தியபாமாவின் கணவர் வாசு கொலை முயற்சி வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.வை சேர்ந்தவர் திருப்பூர் எம்.பி சத்தியபாமா. இவரை அவரது கணவர் வாசு கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாக சத்தியபாமாவின் சகோதரர் புகார் அளித்தார்.
இதையடுத்து வாசுவை காவல்துறையினர் கோபிசெட்டிப்பாளையத்தில் வைத்து கைது செய்தனர். சத்தியபாமாவும் வாசுவும் கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறார்கள்.
Patrikai.com official YouTube Channel