அமித்ஷா உரையை மாற்றி பேசிய கன்னட எம்.பி. பிரகலாத் ஜோஷி (வலது புறம்)

பெங்களூரு:

ர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. இந்நிலையில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் இந்தியில்  பேசிய அமித்ஷா, சித்தராமையா அரசு ஏழைகளுக்கு ஒன்றும் செய்யாது என்று பேசினார்.

ஆனால், அதை மொழி பெயர்த்த கர்நாடக பாஜக எம்.பியான பிரகாலாத் ஜோஷி,  ‘நரேந்திர மோடி அரசு ஏழை களுக்கும் தலித்துகளுக்கும் ஒன்றுமே செய்யாது என மாற்றி பேசினார். இது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சித்தராமையா அரசு ஏழைகளுக்கு ஒன்றும் செய்யாது என்பதற்கு பதிலாக நரேந்திர மோடி அரசு ஏழை களுக்கும் தலித்துகளுக்கும் ஒன்றுமே செய்யாது என்று பேசியது பாஜக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏற்கனவே சமீபத்தில், கர்நாடகா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது,  ‘ஊழல் செய்யும் அரசு எது என்ற போட்டி வைத்தால் அதில் எடியூரப்பாவின் அரசு முதலிடம் பெறும் என்று உளறினார். இது சமூக வலைதளங்களில் வைரலாக விமர்சனம் செய்யப்பட்டு வந்தது.

அமித்ஷா வாயில் இருந்து  உண்மை வந்துவிட்டது என்று விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மற்றொரு கூட்டத்தில், அமித்ஷா சரியாக பேசிய நிலையில், அதை மொழி பெயர்த்த கர்நாடக எம்.பி. பிரகலாத் ஜோஷி மாற்றி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தில் இருந்த பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மேடையில் இருந்த நிர்வாகிகள் உஷார் படுத்தியதை தொடர்ந்து, பின்னர் சுதாரித்து திருத்தி பேசினார். இது மீண்டும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இதுபோல மாற்றி பேசியது குறிப்பிடத்தக்கது.