சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், வழக்கம்போல புத்தகம் போன்று பாஸ் அளிக்க வேண்டும் என்றும் பார்வையற்றோர் போராட்டம் நடத்தினர்.

சென்னை பல்லவன் டிப்போ அலுவலகத்தின் எதிரே இன்று காலை 11 மணிக்கு பார்வையற்றோர் சங்க கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடந்தது. இத குறித்து  தேசிய பார்வையற்றோர் திட்ட செயலாளற்  மனோகரன் தெரிவித்ததாவது:

“பார்வையற்றோருக்கு அளிக்கப்பட்டும் இலவச பாஸை இதுவரை புத்தகம் போல கொடுத்து வந்தார்கள். கடந்த வருடம் ஒரு அட்டையாக அளிப்போம் என்றார்கள். அப்படி அளித்தால் கண் பார்வை இல்லாத எங்களால் பாதுகாத்து வைத்துக்கொள்ள முடியாது. தவறிவிடும். ஆகவே வழக்கம் போலவே புத்தகம் போல தர வேண்டும் என்றோம். அதன்படி தந்தார்கள்.

ஆனால் இந்த ஆண்டு, அட்டை போலவே தருவோம் என்று கூறுகிறார்கள். இதைக்கண்டித்துத்தான் இன்று போராட்டம் நடத்துகிறோம்.

அதே போல பெரும்பாலான பேருந்து நடத்துநர்கள், எங்களுக்கான இருக்கையை எங்களுக்கு ஒதுக்கித் தருவதில்லை. மேலும் நிறுத்தத்தில் நாங்கள் இருந்தால் டபுள் விசில் கொடுத்து சென்று விடுகிறார்கள். ஆகவே  அன்பான பேருந்து ஊழியர்களே..  மனசாட்சியுடன் நடந்துகொள்ளுங்கள்  என்று கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்” என்றார்.